அலாஸ்காவில் பயங்கர நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 22, 2020

அலாஸ்காவில் பயங்கர நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை

அலாஸ்காவில் 7.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அலாஸ்கா சிக்னிக்கில் இருந்து தெற்கே 75 மைல் தூரத்தில் 7.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அலாஸ்கா தீபகற்பத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில், தெற்கு நகரமான சிக்னிக்கில் இருந்து 75 கிலோ மீட்டர் தூரத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் அமெரிக்க தேசிய டி-சுனாமி எச்சரிக்கை மையம் அலாஸ்கா கடற்கரையின் தெற்குப்பகுதி, அலெயுடியன் தீவுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சில இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜி.எம்.டி. நேரப்படி 6.12-க்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment