
உலக நாடுகளின் அரசுகள் கொரோனா விவகாரத்தில் மக்களின் நம்பிக்கையை பெருமளவு இழந்து வருவதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகளுக்கும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 1 கோடியே 59 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 6 லட்சத்து 43 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலும், வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நடவடிக்கையிலும் உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், வைரசின் தாக்கம், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக நாடுகளின் அரசுகள் மீது மக்களுக்கு நம்பிக்கை பெருமளவு இழந்து வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது குறித்து உலகின் பணக்கார நாடுகளில் சிலவான அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான், ஸ்வீடன் ஆகியவற்றில் கிட்ஸ்ட் சிஎன்சி கம்யூனிகேஷன் கன்சல்டிங் குரூப் என்ற நிறுவனம் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
நாடு ஒன்றுக்கு சராசரியாக 1,000 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் அரசுகளின் நம்பிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான், ஸ்வீடன் ஆகிய நாடுகளில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் மிக அதிகம் என அந்நாட்டு மக்கள் கருதுகின்றனர்.
இது குறித்து கிட்ஸ்ட் சிஎன்சி கம்யூனிகேஷன் கன்சல்டிங் குரூப் வெளியிட்டுள்ள செய்தியில், '' இந்த மாதம் பெரும்பாலான நாடுகளில் மக்களின் நம்பிக்கையை தேசிய அரசுகள் இழந்து வருகின்றன’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment