நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டது கழுகு - News View

About Us

About Us

Breaking

Friday, July 31, 2020

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டது கழுகு

மீகொடை, நாவலமுல்ல மயான வீதி பகுதியில் மீட்கப்பட்ட கழுகு, இன்று (31) ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த கழுகு, அத்துருகிரிய பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

பாதாளக் குழு ஒன்றின் தலைவராக கருதப்படும் அங்கொட லொக்காவினால், போதைப்பொருள் விநியோகத்திற்கு பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் குறித்த கழுகு, அத்துருகிரிய பொலிஸாரினால் நேற்று (30) மீட்கப்பட்டது.

இது தொடர்பில் மேல் மாகாண புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நாவலமுல்ல மயான வீதி பகுதியிலுள்ள பண்ணை ஒன்றில் கூட்டில் அடைக்கப்பட்டிருந்தபோது, குறித்த கழுகு மீட்கப்பட்டது.

‘குச எலி முதுது உகுஸ்ஸா’ என அழைக்கப்படும் குறித்த கடல் கழுகு, சுமார் 15 கிலோ கிராம் பாரத்தை சுமந்து செல்லும் ஆற்றல் கொண்டதாக கருதப்படுகின்றது. 

இவ்வகையான கழுகுகளுக்கு, உத்தரவுகளுக்கு அமைய வேலை செய்வதற்கான பயிற்சி அளிக்க முடியும் என, வனஜீவராசி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment