மாகாண சபை முறையினை அரசியல் தீர்விற்கான ஆரம்பமாகக் கொள்ள வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 29, 2020

மாகாண சபை முறையினை அரசியல் தீர்விற்கான ஆரம்பமாகக் கொள்ள வேண்டும் - அமைச்சர் டக்ளஸ்

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறையினை அமுல்படுத்துவதனை அரசியல் தீர்விற்கான ஆரம்பமாகக் கொள்ள வேண்டும் என்பதே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அரசியல் தீர்விற்கான பொறிமுறை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் ​போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

மேலும் கூறுகையில், இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறையினை அமுல்படுத்துவதனை அரசியல் தீர்விற்கான ஆரம்பமாகக் கொள்ள வேண்டும் என்பதே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அரசியல் தீர்விற்கான பொறிமுறையாகும்.

மாகாண சபையை ஆரம்பமாகக் கொண்டு முன்நோக்கி நகர்வதன் மூலம் இறுதி இலக்கை அடைய முடியும். மாற்றுத் திட்டத்திற்கும் மாற்று வேலைத் திட்டத்திற்குமான அதிகாரத்தை கோரி உங்கள் முன்னிலையில் வந்திருக்கின்றோம்.

பாராளுமன்ற தேர்தலில் நாம் எதிர்பார்க்கின்ற அதிகாரத்தை மக்கள் வழங்குவார்களாயின் சில வருடங்களில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.

சுஜீவன் சர்மா

No comments:

Post a Comment

Post Bottom Ad