மின்பட்டியல் தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை பற்றி அமைச்சரவைக்கு அறிவித்து அமைச்சரவை முடிவிற்கு அமைய மின்கட்டணம் தொடர்பில் இறுதி முடிவு எடுப்பதாகவும் பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ மற்றும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அமைச்சில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், கொரோனா தொற்று காரணமாக மின் கட்டணத்தை உரிய வகையில் செலுத்த முடியாதிருப்பதாகவும் பட்டியிலில் கூடுதல் கட்டணம் அறிவிடப்பட்டுள்ளதாகவும் மக்கள் தனக்கு தொலைபேசியில் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
மின் பட்டியலில் கட்டணம் அதிகம் என மக்கள் கூறினாலும் மக்கள் பாவித்த அளவிற்கே கட்டண பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை கூறுகிறது. ஆனால் தங்களுக்கு அநீதி ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறி வருகின்றனர்.
கோவிட் 19 பிரச்சினையுடன் மின் பாவனை அதிகரித்துள்ளதாக பாவனையாளர்களும் ஏற்கின்றனர். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டில் இருந்தது மட்டுமன்றி மின் உபகரண பாவனையும் அதிகரித்துள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாத மின் பாவனைக்காக பாவனையாளர்களிடமிருந்து மின்சார சபைக்கு 2000 கோடி ரூபா கிடைக்க வேண்டியுள்ளது. ஜூன் மாத பட்டியிலில் 90 வீதத்தை பாவனையாளர்கள் செலுத்தியுள்ளனர் என மின்சார சபை தெரிவித்துள்ளது.
ஷம்ஸ் பாஹிம்
No comments:
Post a Comment