நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநித்துவம் கூட வேண்டும், தேசியப்பட்டியலில் செல்லும் எண்ணம் எனக்கு இல்லை - விஜயகலா மகேஸ்வரன் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 5, 2020

நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநித்துவம் கூட வேண்டும், தேசியப்பட்டியலில் செல்லும் எண்ணம் எனக்கு இல்லை - விஜயகலா மகேஸ்வரன்

அமரர் ரவிராஜினுடைய மனைவி சசிகலாவின் அரசியல் பிரவேசத்தை தான் வரவேற்பதாகவும், சசிகலா பிரதிநித்துவப்படுத்தும் கட்சியின் ஊடக பாராளுமன்றம் செல்ல வேண்டும் எனவும் முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சமகால அரசியல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே விஜயகலா மகேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அமரர் ரவிராஜினுடைய மனைவி சசிகலாவின் அரசியல் பிரவேசத்தை நான் வரவேற்கின்றேன். அவருடைய கணவருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை. நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் முடக்கப்பட்டுள்ளன. அதனால் சசிகலா மன அழுத்தத்தற்க்கு ஆளாகியுள்ளார்.

சசிகலா தான் பிரதிநித்துவப்படுத்தும் கட்சியின் ஊடக பாராளுமன்றம் செல்ல வேண்டும். பெண்கள் எனக்கு கட்டாயம் வாக்களிக்கவும். ஏனைய கட்சிகளுக்கு வாக்களிக்கும் போது அமரர் ரவிராஜினுடைய மனைவிக்கும் வாக்களிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநித்துவம் கூட வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்திலேயே பெண்களுக்கான 25 சதவீத ஒதுக்கீடை கொண்டுவந்திருந்தோம். அதன் மூலம் பிரதேச சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க கூடியாத இருந்தது.

பாராளுமன்றத்திலும் பெண்களுக்கான 25 சதவீத ஒதுக்கீடை கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொண்டிருந்த நிலையில்தான் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. எனினும் அநேகமான கட்சிகளில் ஒவ்வொரு தேர்தல் மாவட்டங்களிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களின் வெற்றி மக்களின் கைகளிலேயே உள்ளது.

நான் கடந்த பத்து வருடங்களாக மக்களுக்கான பல சேவைகளை செய்து வருகின்றேன். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் அமோக வாக்குகளால் நான் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவேன் என்ற நம்பிக்கை எனக்குண்டு. அதில் தவறும் பட்சத்தில் தேசியப்பட்டியலில் ஊடாக பாராளுமன்றம் செல்லும் எண்ணம் எனக்கு இல்லை எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment