வடக்கிற்கு ஒன்றையும், தெற்கிற்கு பிறிதொன்னையும் ஒருபோதும் கூற மாட்டேன் - பிரதமர் மஹிந்த - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 22, 2020

வடக்கிற்கு ஒன்றையும், தெற்கிற்கு பிறிதொன்னையும் ஒருபோதும் கூற மாட்டேன் - பிரதமர் மஹிந்த

ஐ.தே.க. அதிகாரத்தை கேட்பது நாட்டில் ...
(இராஜதுரை ஹஷான்)

வடக்கிற்கு ஒன்றையும், தெற்கிற்கு பிறிதொன்னையும் ஒருபோதும் கூற மாட்டேன். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ யாழ்ப்பாணத்தில் குறிப்பிட்ட விடயத்தை தெற்கில் மாற்றி குறிப்பிட்டுள்ளார். இரட்டை வேடம் போடுபவர்களுக்கு மக்கள் ஆதரவு வழங்க மாட்டார்கள். என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஹோமாகம நகரில் புதன்கிழமை இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பல்வேறு சவால்களுக்கு மத்தியில் 2004 ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பினை ஏற்றேன். குறுகிய காலத்தில் 30 வருட கால சிவில் யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது. நாட்டின் அபிவிருததி பணிகள் வடக்கு தெற்கு வேறுபாடின்றி துரிதமாக முன்னெடுக்கப்பட்டன. ஆனால் 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் அபிவிருத்தி பணிகள் அரசியல் பழிவாங்களுக்காக இடை நிறுத்தப்பட்டது.

தேசிய வளங்களை விற்பதில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியது. அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு வழங்கப்பட்டது. மத்தளை விமான நிலையம் இத்தியாவிற்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்நிய பிரதமருடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுத்து மத்தளை விமான நிலைய விவகாரத்தை திருத்திக் கொண்டோம்.

கடந்த அரசாங்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான முரண்பாடு முழு அரச நிர்வாகத்தையும் பலவீனப்படுத்தியது. இதன் விளைவை மக்கள் எதிர் கொண்டார்கள். இந்நிலைமை மீண்டும் தோற்றம் பெற கூடாது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கொள்கை பாராளுமன்றத்தின் ஊடாகவே செயற்படுத்தப்பட வேண்டும். அதற்கு அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும். ஜனாதிபதியுடன் எம்மால் (பொதுஜன பெரமுன) மாத்திரமே இணக்கமாக செயற்பட முடியும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் யாழ்ப்பணத்தில் குறிப்பிட்ட விடயத்தை தெற்கில் மாற்றியமைத்துள்ளார். அரசியல் தேவைகளுக்காக இரட்டை வேடம் போடுபவர்களை மக்கள் ஆதரிக்கமாட்டார்கள். வடக்கிற்கு ஒன்றையும் தெற்கிற்கு பிறிதொன்றையும் ஒருபோதும் குறிப்பிடமாட்டேன். என்றார்.

No comments:

Post a Comment