பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக ஞானசார தேரர் முறைப்பாடு..! - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 22, 2020

பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக ஞானசார தேரர் முறைப்பாடு..!

மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM ...
(எம்.மனோசித்ரா)

கருத்துக்களைத் தெரிவிக்கும் உரிமை நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜைக்கும் உரித்துடையதாகும். ஆனால் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் என்னுடைய பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. கருத்து தெரிவிப்பதற்கு எனக்கு உள்ள அடிப்படை உரிமையை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடளித்துள்ளதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவில் இவ்விடயம் தொடர்பில் கடிதமொன்றினை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்தாவது 2017 ஆம் ஆண்டு முதல் என்னுடைய பேஸ்புக் கணக்கு தடை செய்யப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள முஸ்லிம் அடிப்படைவாதிகளின் வேண்டுகோளுக்கமைய கடந்த அரசாங்கமே இவ்வாறு செய்துள்ளது. பயங்கரவாதிகள், அடிப்படைவாதிகள், தற்கொலை குண்டுதாரிகள் போன்றோர் சமூக வலைத்தளங்கள் ஊடாகவே தமது அடிப்படைவாத அல்லது பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.

அவ்வாறானவர்களுக்கு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் உள்ளிட்ட விடயங்கள் பற்றி சமூக வலைத்தளங்களின் ஊடாக பேச முடியும். ஆனால் அதன் காரணமாக ஏற்படப்போகும் பாதிப்புக்களைக் கூறுவதற்கு எனக்கு சந்தர்ப்பம் இல்லை. நாட்டின் பிரதான ஊடகங்களிலும் சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை. சமூக வலைத்தளங்களிலும் சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை. அவ்வாறெனில் எனது உரிமை எங்கே ?

கொடி சின்னத்தில் நாம் ஒரு கட்சியை உருவாக்கியிருக்கின்றோம். இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றோம். அரசியல் நிலைப்பாடுகளை கூறுவதற்கான உரிமை அனைவருக்கும் காணப்படுகிறது. ஆனால் இது போன்ற செயற்பாடுகளால் எமது நிலைப்பாடுகளை எவ்வாறு மக்களிடம் கொண்டு செல்வது? எனவேதான் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பிரதான அதிகாரியொருவருக்கும் கடிதமொன்றினைக் கையளித்துள்ளோம்.

எமது கருத்துக்களை கூறவோ காணொளிகளை பகிரவோ முடியாமலுள்ளது. என்னுடைய பெயர் அல்லது புகைப்படம் போடப்பட்டால் கூட அந்த கணக்குகளும் முடக்கப்படுகின்றன. இது முஸ்லிம் அடிப்படைவாதிகளின் செயற்பாடுகளாகும். எனது உரிமையையே நான் கோருகின்றேன். இது கவலைக்குரிய விடயமாகும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad