மறைந்த மாபெரும் தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களின் பின்னர் வந்த இந்த தலைவர் ரவூப் ஹக்கீம் என்ன செய்தார் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 22, 2020

மறைந்த மாபெரும் தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களின் பின்னர் வந்த இந்த தலைவர் ரவூப் ஹக்கீம் என்ன செய்தார்

ஒரே கடிதத்தில் இராஜினாமா ...
மறைந்த மாபெரும் தலைவரின் மறைவை அடுத்து அவரின் கட்சியை இரட்டைத் தலைமைத்துவம் என்ற பெயரில் அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க வின் கைப் பொம்மையாக இருந்து அழிக்க பாடுபட்ட அவரின் மனைவியும் அவரின் கூட இருந்தவர்களும் செய்த சக்திகளுக்கு எதிராக அன்று அத்தனை நீதிமன்ற வழக்குகளையும் எதிர்த்து போராடி இந்த கட்சியை இன்றுவரை பாதுகாத்தார் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள்.

அதன் பின்னர் அதே சந்திரிக்காவின் கைப்பொம்மையாக இருந்து அமைச்சு பதவி வேண்டும் என்பதற்காக இந்த இயக்கத்தை அழிக்க புறப்பட்ட சதிகார ரிசாட் என்பவரினதும் அவரது அடிவருடி தோழர்களான அமீர் அலி, ஹுசைன் பைலா போன்ற அடிவருடிகளிடமிருந்தும் இந்த கட்சியையும் மக்களையும் பாதுகாத்தார் இந்த தலைவர்.

மாவனல்லை கலவரத்தின் போது அங்கு வாழும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அநியாயங்களுக்கு எதிராக தனது அமைச்சுப் பதவிகளையும் துறந்து அந்த மக்களுக்காக அரசாங்கத்துக்கு எதிராக போராடி அந்த ஆட்சியை கவிழ்த்து சந்திரிக்கா அம்மையாரை வீட்டுக்கு அனுப்பினார் இந்த தலைவர்.

மஹிந்த அவர்களின் ஆட்சியில் திட்டமிட்ட முறையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற் கொள்ளப் பட்ட பேருவளை, தர்கா டவுன் தாக்குதல்களுக்கு எதிராக இந்த நாட்டிலும் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் ஒரு அமைச்சராக இருந்து கொண்டு நீதி தேடினார் இந்த தலைவர் அவர்கள்.

அதன் காரணமாக அந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக அதே அரசாங்கத்தில் இருந்து எதிர்ப்புக்களை செய்து பாராளுமன்றிலும் அதற்கு வெளியேயும் குரல் கொடுத்தார், அதன் காரணமாக இனவாதிகளால் வஞ்சிக்கப் பட்டார், இலக்கு வைக்கப் பட்டார்.

பொத்துவிலில் வயல் வேலைக்கு சென்ற அப்பாவி முஸ்லிம்கள் பதினொரு பேர் அரச படைகளால் கொல்லப்பட்டு சாக்குகளில் அவர்களது உடல்கள் கட்டப்பட்ட போது அதற்கு அன்று மஹிந்தரின் முந்தானைக்குள் புகுந்து கொண்டிருந்த அதாவுல்லாஹ் போன்றவர்கள் பயங்கரவாத சாயம் பூச முற்பட்ட போது அதற்கு எதிராக கிளர்ந்து அது அரச படைகளின் செயல் என்று துணிகரமாக கூறி அதற்காக அரச விசேட அதிரடிப் படைகளின் தனக்கான மெய்ப்பாதுகாப்பு கூட விலக்கப் பட்ட போதும் அந்த மக்களுக்காக நீதிமன்றம் சென்று வாதாடினார் இந்த தலைவர்.

எப்போது எங்கெல்லாம் முஸ்லிம்களுக்கு அநீதி நடந்ததோ அங்கெல்லாம் இவரின் பிரசன்னம் அவற்றிற்கு எதிராக இருந்து கொண்டே இருந்தது.

கடந்த அரசாங்கத்தின் பங்காளியாக இருந்து கொண்டு அந்த அரசாங்கத்தின் அதிகார நோக்கு காரணமாக இருந்த இரண்டு அதிகார துருவங்களின் அசட்டையீணங்களுக்கு எதிராக நடந்த முஸ்லிம் மக்களுக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல்களுக்கு எதிராக போராடினார்.

தாக்குதல் நடந்த பகுதிகளுக்கு தனக்கான பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் தட்டத் தனியாக இரவு நேரங்களில் கூட சென்று பாதிக்கப் பட்ட மக்களையும் அவர்களின் நிலைமைகளையும் பார்வையிட்டதோடு அந்த மக்களுக்கு பாதுகாப்பையும் நஷ்டஈடுகளையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்தார்.

மைத்திரி ஆட்சிகால ஜனநாயக எதிர்ப்பு ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக தனக்கே உரிய முறையில் ஒரு சமுக தலைவனாக முஸ்லிம் மக்களோடும் ஏனைய ஜனநாயக சக்திகளோடும் அரசியல் அமைப்பை பாதுகாக்கும் விதமாக ஜனநாயக போராளியாக போராடினார், வெற்றியும் அடைந்தார்.

பேரினவாத கொள்கையோடு சிறுபான்மை ஆதரவின்றி ஆட்சி அமைப்போம் என்ற தற்போதைய அரசாங்கத்தின் ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலில் அதற்கு எதிராக சிறுபான்மை இனங்களை ஒன்றினைந்து அந்த தேர்தலை எதிர்கொண்டு தனது கட்சி மக்கள் வாழும் பிரதேசங்களிலும் சிறுபான்மை மக்களின் பகுதிகளிலும் அந்த கொள்கைக்கு எதிராக துனிந்து வெற்றிகளை பெற்று இந்த நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் சிறுபான்மை மக்களின் செய்தியை தெளிவாக சொன்னார்.

தான் அரசாங்கங்களில் அமைச்சராக பதவி வகித்த போது அதிலும் குறிப்பாக கடந்த மைத்திரி கால அரசாங்கத்தில் நகர அபிவிருத்தி நீர் வளங்கள் அமைச்சராக இருந்து சுமார் 33000, ஆயிரம் கோடிகள் கொண்ட அபிவிருத்தி பணிகளுக்கு காரணமாக இருந்ததோடு குடிநீர் இன்றி இருந்த எத்தனையோ வரண்ட பிரதேசங்களுக்கு எல்லாம் குடிநீர் வசதிகளை பெற்றுக் கொடுத்தார்.

அது மாத்திரமன்றி தனது அமைச்சின் நிதி ஒதுக்கீடுகளைக் கொண்டுநாடுமுழுவதும் தேவையான நிதி ஒதுக்கீடுகளை செய்து அபிவிருத்தி பணிகளை செய்தார், (சில பிரதேசங்களில் நடை பெறவில்லை என்பதற்கு பழி தலைவர் இல்லை, அதற்கு பொறுப்பானவர்கள் அந்த பகுதி பாராளுமன்ற உறுப்பினர்களின் கையாலாகாத் தணமேயாகும்)

அமைச்சர்களாக கட்சி தலைவர்களாக இருந்தபோது செய்த திருவிளையாடல்களுக்காக ஊழல்களுக்காக இன்று ஊழல் பேர்வழிகளாக நாளொரு நீதிமன்றம் என்றும் தினம் ஒரு சீ.ஐ.டீ விசாரணை என்றும் அலையும் வெட்கம் கெட்ட அமைச்சராகவோ தலைவராகவோ அவர் இதுவரை இருந்ததே இல்லை, எதிலும் எப்போதும் நேர்மையாகவே செயற்பட்டார்.

சாய்ந்தமருது நகர சபை கோரிக்கையின் பேரில் அவர் மீது சுமத்தப் படும் குற்றச் சாட்டுகளுக்காக பழிகளுக்காக, அவமானங்களுக்காக அவர் இலகுவான தீர்வை நாடவில்லை, அவ்வாறு நாடி இருந்தால் எப்போதோ அந்தப் பிரச்சினை தீர்ந்து போயிருக்கும்.

ஆனால் அந்த பிரச்சினையில் சம்பந்தப்பட்ட அடுத்த தரப்பான கல்முனை விவகாரத்தை அதன் பாதுகாப்பை, அதன் எல்லைகளை பிரிப்பதில் அவர் அச்சம் கொண்டார்.

கல்முனை மருதூர் என்ற விவகாரத்தை இரு கண்கள் போன்று பார்த்தார், அதற்காக என அவர் தன் மீது சுமத்தப்பட்ட அத்தனை பழிகளையும் இதுவரை சுமந்தார், இன்னும் சுமக்கின்றார்.

ஆனால் அன்று முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் போன்று இரவோடு இரவாக வர்த்தமானி வெளியிட்டு மக்களை ஏமாற்ற முன்வரவில்லை.

வாக்கு என்பதற்கு அப்பால் சமுக இருப்பு என்ற விடயத்தையும் முஸ்லிம் மக்களின் இணைப்பு பெரும் பலம் என்ற விடயங்களுக்கே முன்னுரிமை வழங்கினார்.

கடந்த ஆட்சி இறுதியில் முஸ்லிம் ஆளுநர்களுக்கு எதிராகவும் அமைச்சர் ரிசாடுக்கு எதிர்க்கவும் என அன்னிய பேரின மதகுருமார் மேற்கொண்ட கண்டி உண்ணாவிரதத்துக்கு எதிராக அவர்கள் தனது கட்சிக்கும் தனக்கும் எதிரான போக்கு கொண்டவர்கள் என்ற போதிலும் முஸ்லிம் சமூகம் என்பதற்காக தானும் தனது கட்சி அமைச்சர்களும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களோடு இணைந்து அமைச்சு பதவிகளை துறந்து இந்த நாட்டு சிங்கள பேரின பகுதிகளில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிரான சதிகளை ஒரே நாளில் முடிவுக்கு கொண்டு வந்தார்.

அண்மைய குரோணா தொற்று மரணங்களில் மரணமாகும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிக்கும் சர்வதேச விதிமுறைகளை மீறிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு எதிராக தானே முன்னின்று நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு அதற்கு எதிராக சர்வ கட்சி மாநாடு மற்றும் சர்வதேசங்களின் கவணத்தை ஈர்த்தார்.

இதை விட ஒரு கட்சியின் தலைவராக அவர் வேறு என்னதான் செய்ய வேண்டும் ??

முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி முஸ்லிம் மக்களுக்கு தனிநாடு வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப் பட்ட கட்சி என்றா அதை விமர்சிப்போர் நினைத்துக் கொண்டு வசை பாடுகின்றனர் ??

ஊருக்கு ஒரு படை வேண்டும், பிரதேசத்துக்கு ஒரு பாராளுமன்றம் வேண்டும் என்றோ ஊருக்கு ஒரு நாடு வேண்டும் என்றோ ஒருபோதும் அந்தக் கட்சி உருவாக்கப் படவில்லையே.
அப்படி இருக்க வேறு என்னதான் வேண்டும் இந்த விமர்சனங்களை விதைக்கும் கும்பல்களுக்கு ?

இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களும் ஒரு தனித்துவமான இனம் அவர்களுக்கு என்று அவர்களது சமய சமூக அரசியல் உரிமைகளை அடைய தகுதி உடையவர்கள், ஆட்சியில் அதன் அமைச்சரவையில் அதன் பங்குகளில் அவர்களும் அவர்களது விகிதாசாரத்துக்கு ஏற்ப உரிமைகளை அடைய உரிமை கொண்டவர்கள் என்ற விடயத்தில் இன்றுவரை முஸ்லிம் காங்கிரசும் அதன் தலைமையாக உள்ள ரவூப் ஹக்கீம் அவர்களும் மறைந்த தலைவரின் வழியில் அவரது கட்சியை இன்று வரை பல துரோக கும்பல்களின் துரோகங்களுக்கு மத்தியில் சரியான பாதையில் முடியுமானவரை வழிநடாத்தியே வருகின்றார் .

அதில் சில வேளைகளில் துரோகிகளின் துரோக செயற்பாடுகளால் தடைகள் ஏற்பட்டதே தவிர வழிமாறல்கள் ஏற்படவில்லை, அது இந்த நாட்டு அரசியல் மற்றும் சட்ட வரையறைகளை பின் பற்றிய வாறு இலங்கை என்ற இந்த அழகிய எங்கள் தாய் நாட்டின் அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ள ஒவ்வொருவரின் மத இன அடையாள உரித்துக்களை பாதுகாத்து முஸ்லிம் மக்களும் அதன் உரிமைகளை பெற்று வாழ என அந்த உரிமைக்கான பயணத்தில் பல வெற்றிகளை அடைந்தே செல்கின்றது, இன்னும் அவ்வாறே வரும் காலத்திலும் பயணிக்கும் என்று கூறியவனாக.

எஸ்.எச்.எம். பிர்தௌஸ்

No comments:

Post a Comment