யாழ்ப்பாணம் சலாய் பகுதியில் ஏராளமான வெடிபொருட்கள் கடற்படையினரால் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Monday, July 6, 2020

யாழ்ப்பாணம் சலாய் பகுதியில் ஏராளமான வெடிபொருட்கள் கடற்படையினரால் மீட்பு

கடற்படையினரால் யாழ்ப்பாணம், சலாய் பகுதியில் சனிக்கிழமை (04) நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ஏராளமான வெடிபொருட்கள் மற்றும் பல கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு கடற்படை கட்டளைக்கு கிடைத்த தகவலின்படி, யாழ்ப்பாணம் சலாய் பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது 120 மில்லி மீட்டர் மோட்டார் ரவை ஒன்று, 81 மில்லி மீட்டர் மோட்டார் ரவை ஒன்று, 60 மில்லி மீட்டர் மோட்டார் ரவை ஒன்று மற்றும் 3 ஆர்.பி.ஜி குண்டுகள் மற்றும் 5 கைக்குண்டுகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.

இதேவேளை, விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு உடல் பொறியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வெடிபொருட்கள் மனிதாபிமான நடவடிக்கையின் போது பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றதுடன் குறித்த வெடிபொருட்களைப் பற்றி முல்லைதீவு பொலிஸ் சிறப்பு பணிக்குழுவிடம் அறிவிக்கப்பட்டது.

வெடிபொருட்கள் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை வெடிபொருட்கள் அதேஇடத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment