நீர்கொழும்பு சிறைச்சாலை பிரதான சிறை காப்பாளர்களுக்கு விளக்கமறியல் - சிறை அத்தியட்சகரின் பிடியாணையை உடனடியாக நிறைவேற்றுமாறு உத்தரவு - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 29, 2020

நீர்கொழும்பு சிறைச்சாலை பிரதான சிறை காப்பாளர்களுக்கு விளக்கமறியல் - சிறை அத்தியட்சகரின் பிடியாணையை உடனடியாக நிறைவேற்றுமாறு உத்தரவு

நீர்கொழும்பு சிறைச்சாலை பிரதான சிறை காப்பாளர்களுக்கு வி.மறியல்-3 Jailors of Negomob Prison Remanded Over Misusing Power
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் சரணடைந்த நீர்கொழும்பு சிறைச்சாலையின் பிரதான சிறைக் காப்பாளர்களான (Jailer) சரத் பண்டார, நிஷாந்த சேனாரத்ன, காலிங்க கலுஅக்கல ஆகியோருக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

இன்று (29) அவர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு ஓகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியில் விதிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையிலுள்ள கைதி ஒருவருக்கு குளிரூட்டி உள்ளிட்ட வசதிகளை வழங்கிய குற்றச்சாட்டு தொடர்பில் குறித்த மூவர் மற்றும் அநுருத்த சம்பாயோ ஆகிய நால்வருக்கு, கடந்த வாரம் (22) பிடியாணை உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நீர்கொழும்பு சிறை அத்தியட்சகர் அநுருத்த சம்பாயோவை கைது செய்ய வழங்கப்பட்ட பிடியாணையை உடனடியாக நிறைவேற்றுமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad