நேற்று முன்தினம் வியாழக்கிழமை (23) நள்ளிரவு 12.00 மணி முதல், நேற்று வெள்ளிக்கிழமை (24) நள்ளிரவு 12.00 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது, பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 1,750 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள், ஆயுதங்கள், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 276 பேரும், ஏனைய குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டுகளில் 691 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 301 பேரும், கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 163 பேரும், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 09 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 03 பேரும், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 307 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சுற்றிவளைப்புகளின்போது ரிபீட்டர் வகை துப்பாக்கிகள் 04உம், சட்டவிரோத மதுபானம் 4,115 லீற்றரும் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்தோடு, ஹெரோயின் 159 கிராம் 014 மில்லிகிராமும், கஞ்சா 47 கிலோகிராம் 628 கிராம் 062 மில்லிகிராமும், ஐஸ் போதைப்பொருள் 42 கிராம் 165 மில்லிகிராமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment