காங்கோ நாட்டில் மாகாண முன்னாள் துணைத் தலைவர் சென்ற வாகனத்தை குறிவைத்து கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர்.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப் போர் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் உட்பட பலர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டின் இட்டுரி மாகாணம் டிஜுஜு நகரின் மடிடி கிராமத்தில் உள்ள வீதியில் இரண்டு கார் சென்று கொண்டிருந்தது. அந்த காரில் இட்டுரி மாகாண முன்னாள் துணைத் தலைவர், பொலிசார், ராணுவ வீரர்கள் உட்பட பலர் பயணம் செய்தனர்.
மடிடி கிராமத்தின் காட்டுப் பகுதியை கடந்தபோது அங்கு மறைந்திருந்த கிளர்ச்சியாளர்கள் வாகனங்களை குறிவைத்து துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மாகாண துணைத் தலைவர், 4 ராணுவ வீரர்கள், 3 போலீசார் உள்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர்.
No comments:
Post a Comment