PCR பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்தால் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவர் - News View

About Us

About Us

Breaking

Friday, June 5, 2020

PCR பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்தால் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவர்

வெளிநாடுகளிலிருந்து வரும் நபர்கள் பீசீஆர் பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்தால் அவர்களை மீண்டும் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதான தொற்று நோய் நிபுணத்துவ மருத்துவர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் இராஜதந்திர அதிகாரி ஒருவர் நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பீசீஆர் பரிசோதனையை நிராகரித்து நாட்டிற்குள் பிரவேசித்துள்ளார்.

இராஜதந்திர சிறப்புரிமையின் கீழ் பரிசோதனையை மேற்கொள்ளாது அவர் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த பிரதான தொற்று நோய் நிபுணத்துவ மருத்துவர் டொக்டர் சுதத் சமரவீர, நாட்டுக்கு வரும் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பீசீஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். இதுவரை 71 ஆயிரம் பேருக்கு பீசீஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் இந்த தூதரக அதிகாரி நேற்று அதிகாலை 1.30 அளவில் விமான நிலையத்தை வந்தடைந்தது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment