வாள் வெட்டு குழு தாக்குதல் - தந்தை, மகன் உள்ளிட்ட மூவர் படுகாயம் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 7, 2020

வாள் வெட்டு குழு தாக்குதல் - தந்தை, மகன் உள்ளிட்ட மூவர் படுகாயம்

தென்மராட்சி, கொடிகாமம் பகுதியில் இன்று (07) ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணியளவில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் தந்தை, மகன் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கொடிகாமம், கச்சாய் வீதிப் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்த வாள் வெட்டுக் குழு வீட்டில் இருந்தவர்கள் மீது வாள்களால் தாக்குதல் நடாத்தியதில் வீட்டில் இருந்த 53 வயதான வேலுப்பிள்ளை சுரேந்திரன் மற்றும் அவரது மகனான 19 வயதான சுரேந்திரன் றெஜிஸ்ரன் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் தாக்குதல் நடத்த வந்த வெள்ளாம்போக்கட்டி, கொடிகாமத்தைச் சேர்ந்த 23 வயதான நபர் ஒருவரும் தலையில் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வாள் வெட்டில் படுகாயமடைந்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

(சரசாலை நிருபர் - த. சுபேசன்)

No comments:

Post a Comment