மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு செல்லும் பிரதான வீதி ஒருவழி பாதையாக மாற்றம் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 28, 2020

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு செல்லும் பிரதான வீதி ஒருவழி பாதையாக மாற்றம்

வீதி விபத்துக்களைத் தடுக்கும் நோக்கில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு செல்லும் பிரதான வீதி ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு செல்லும் பிரதான வீதி ஒருவழி பாதையாக மாற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் முன்னெடுத்தித்திருந்த வேளையில் நாட்டில் ஏற்பட்ட கொவிட் 19 தொற்று நோய் காரணமாக அனைத்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் தற்போது நாட்டின் நிலைமை வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு செல்லும் பிரதான வீதி உத்தியோகபூர்வமாக நேற்று முதல் ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது

(எம்.எஸ்.எம். நூர்தீன், ரீ.எல். ஜவ்பர்கான்)

No comments:

Post a Comment