இது சற்று நீண்ட கட்டுரை தான். சில தவறுகளும் இருக்கலாம். ஆனால் மன்னிப்பு கேட்கமாட்டேன். புரிந்து கொள்வது உங்கள் திறமை! பிழை விடாமல் எதையும் சரி செய்ய முடியாது தோழர்களே!
நான் அறிந்த விடயங்களை விட அறியாத விடயங்களும் விடைகளுமே அதிகம்...
ஆனால் நடுநிலைப் போக்கில் நிகழும் விடயங்களைக் கொண்டு பல யதார்த்தங்களை எம்மால் உணர முடியும் என்பது உள்ளார்ந்தமாக ஏற்றுக் கொள்ளக் கூடியதே...
"மனிதன் ஓர் அரசில் பிராணி" என்ற அரிஸ்ட்டோட்டிலின் கருத்தை நான் பிள்ளைப் பருவத்தில் கேட்டதும் "என்னையும் சேர்த்து அல்லவா அவர் மிருகம் என்றிருக்கிறார்!" என்று அவர் மீது எனக்குளேயே கோபப்பட்டுருக்கிறேன்...
பிராணி என்ற சொல்லின் விம்பங்கள் கொடுக்கும் அர்த்தங்களை அறிந்த பிறகு தான் அந்த அறிஞர் மீது எனக்கு ஓரளவு நம்பிக்கை வந்தது.
தலைப்பில் உள்ள விடயத்திற்கு வாரும்... என்றும், ஏன் இதை இங்கு புணைக்கிறீர் என்றும் கேட்கலாம். இந்த உலகில் எல்லாமே ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டது தான் நண்பர்களே!
அந்த விடயத்தை இங்கு நான் சொன்னதும் என்னைப் பொருத்தமட்டில் அப்படியொரு அர்த்தம் தான். ஏன் என்றால் என்னால் தவறுதலாக புரியப்பட்ட அறிஞர் அரிஸ்ட்டோட்டிலை சரி காணவே வருடங்கள் சென்றன. ஆக இந்தத் தலைப்பு என்பதே இனவாத சீற்றம் என்பது நீங்கள் மட்டுமல்ல என்னாலும் ஏற்கக் கூடியது. ஆனால், நான் அப்படியொரு அர்த்த புஷ்பம் கொண்டு இத்தலைப்பை இங்கு எடுத்துக் கொள்ளவில்லை! என்னைப் போன்ற சிலரின் பார்வையில் இது ஓர் அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் ஏற்பட்ட விளைவு என்று தான் விளக்கம் கொடுக்க முடியும் அன்றி வெறும் இனவாதம் அல்ல. தலைப்பை எங்கோ கொண்டு சென்று எங்கயோ அர்த்தப்படுத்தியுள்ளேன் என்றும் நீடித்துள்ளேன் என்றும் என் மீது நீங்கள் காரசாரம் கொள்ளலாம். என்றாலும் விளக்கம் என்பதே விரிவுரை தான் என்பது ஒர் அர்த்தம் அல்லவா? இதை வைத்து பேசியது போதும் விடையத்திற்குள் போவோம்...
"கருப்பு ஜுலைக் கலவரம்" என்றதும் தமிழின மக்களிடையே அது ஒர் இரத்தக் கண்ணீரும் மங்கிப் போன ஆயிரம் மங்கை உணர்வுகளும் இராக்களும் எனலாம்! அது அந்த இனத்திற்கு மாத்திரமல்ல; பௌத்த சிங்கள, முஸ்லிம் உட்பட அனைத்தின மக்களிடையேயும் பெரும் மனச்சஞ்சலம் ஏற்படுத்தியது எனலாம். தேசிய அரசியலை எந்தக் கட்சி கைவசமாக்கிக் கொள்வது என்ற நிலவரத்திலேயே அந்த நிலவரம் அரங்கேற்றப்பட்டது! அதன் பின்னரே கொதித்தெழுந்த இலங்கைத் தமிழினம் தமிழீழம் வேண்டி அரசிடம் போராடத் துவங்கியது என்று சொல்லலாம். ஆனால் நான் முஸ்லிம்களை ஏன் தமிழன் என்று கூரவில்லை என்ற பார்வை சில புதுக் கொள்கை வாதிகளிடத்தே கேள்வி எழக் கூடும்: இலங்கைச் சோனகர்கள் என்பது தமிழ் மொழி, சிங்கள மொழி என்று பரந்து பட்ட அன்னியோன்னிய மற்றும் அன்னியச் செலாவணி கலாசார மரபுகளோடு வாழ்பவர்கள் என்றாலும் தனி இனம் என்ற கூற்றில் உள்ளடக்க முடியாத சமூகம் எனலாம். அதனால் வட,கிழக்கில் வாழும் சோனிகள் தமிழ் மொழி பேசுபவர்கள் தவிர தமிழினம் அல்ல. அதே போல தமிழ், சிங்கள மக்களோடு புனைந்து பரஸ்பரம் பேணி வாழ்பவர்கள். கடந்த வருடம் விரோதி சஹ்ரான் தற்கொலையாளிகளால் 'உயிர்த்த ஞாயிறு ' தாக்குதல் என்பது இலங்கை முஸ்லிம் மக்களை கண்ணை மூடி குழியில் தள்ளி விட்டதைப் போலாகிவிட்டது எனலாம்!
தவிர இலங்கை நாட்டின் முஸ்லிம் மக்கள் எந்தத் தீவிர நடவடிக்கைகளுக்கும் இதுவரை முயலாதவர்கள்! ஆனாலும் அடிக்கடி வம்புக்கு இழுக்கும் சதிகள் நடக்காமல் இல்லை. உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர்களால் அடாவடியாக வடக்கை விட்டு முஸ்லிங்கள் விரட்டியடிக்கப்பட்டனர், காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பிரதேசங்களில் பள்ளிகளுக்குள்ளேயே படுகொலைகளும் அக்கிறமும் நோவினையும் செய்யப்பட்டனர் அது தொடக்கம் இன்றுவரை மாவனல்லை கலவரம் தொட்டு பேறுவளை, தர்கா நகர், குருநாகல், கண்டி, அம்பாரை பள்ளி வாயல் தாக்குதல் உட்பட கிழக்கு முஸ்லிம் மக்களின் காணிச் சுவீகரிப்பு என்று சமயம், கல்வி, கலாச்சாரம், பொருளாதாரம், சமூக ஒழுங்கு, நிம்மதி, தன்மானம், உரிமை, விருப்பு வெறுப்பு என்று எதில் கை வைக்கவில்லை எதைக் கேல்விக்கு உட்படுத்தவில்லை?
ஆனால், எதிலும் இலங்கை முஸ்லிம் மக்கள் கிளர்ச்சி செய்ய எழவில்லை என்பதே தெற்கு மற்றும் அற்ப அரசியல் வாதிகளின் நிராசையாகியுள்ளது. அதைக் கையேடு ஆகுமாக்க முயற்சிப்பதே கடும் போக்கு வாதிகளின் தற்போதைய தீவிர முயற்யாகும்!
விடயத் தலைப்பைத் தாண்டி பேசுகிறேன் என்று நீங்கள் எண்ணலாம்; எதையும் ஒன்றோடு ஒன்று பிணைத்து பேசுவதில் புரிந்துணர்விலும் தெளிவு இருக்கும் என்று எண்ணுகிறேன். இனி தமிழ் அரசியலில் கிழக்கை வடக்குடன் இணைக்கும் அபிலாஷை பற்றியும் அது நடந்தால் முஸ்லிம்களின் நிலத்தொடர்பற்ற(அல்லது நியாயமான நிலத்தொடர்புள்ள) தென்கிழக்கு சுய ஆட்சி அலகு வேண்டும் என்ற கட்டாயத் தேவையும் அந்த சமஷ்டி இணைப்பில் முட்டுக்கால் கொடுக்கும் கல்முனை மாநகரம் மற்றும் அம்மாநகரை முஸ்லிம் மக்களிடத்திலிருந்து பிரித்தெடுக்கும் கல்முனை தமிழ் மக்களின் உப பிரதேச செயலகத்திற்கான முழுச் சபை காணி அடிப்படையில் அதிகார பூர்வமாக பிரித்தெடுத்தல் மற்றும் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபை வேண்டுகோளும் என்பதனூடே முட்டுக்கால் வைத்திருக்கும் முஸ்லிம் மாநகரமான கல்முனையை அம்மக்களிடத்தே இருந்து பலமிழக்கச் செய்து தமிழ் மக்களைக் காரணம் காட்டித் தமிழ் அரசியல்வாதிகளின் அபிலாஷை நிறைவேறத் துடிக்கும் நிலவரத்தின் நியாயங்கள் பற்றிப் பார்ப்போமேயானால்...
எல்லா இடங்களைப் போலவே வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் தமிழ், முஸ்லிம் மக்கள் அன்னியோன்னியமாகவும் நல்லுறவுடனும், சகோதர பிணைப்புடனுமே வாழ்ந்து வந்தனர்...
தெளிவான நீர்த்தடாகம் போல வாழ்ந்த மக்களின் வாழ்வில் கலங்கம் விளைவித்ததைப் போல எங்கோ தொடங்கிய அரசியல் அபிலாஷைகள் பிரச்சனைகள் இரு சகோதர மக்களிடையே பூகம்பமாக்கி இனத் துவேஷத்தை தோற்றுவித்துவிட்டது என்பது ஒரு கசப்பான சம்பவமே!
அவ்வாறே தென்கிழக்குப் பகுதி மற்றும் கல்முனை மாநகரத்திலும் பரஸ்பரம் பேணி வாழ்ந்து வந்தனர்...
ஆனால், இன்று தலைகீழாக எல்லாமே முழு மாற்றம் என்ற பொருளில் விலை போய்விட்டது. தமிழ் மக்களில் அரசியல் இலாபம் கண்டு வெறுத்துப் போன அரசியலுக்கு அவ்வப்போது முஸ்லிம்களையும் வெலுத்துக் கட்டாமல் விட்டதும் இல்லை!
இப்போதைய நிலைகளில் முஸ்லிம் மக்களையும் முஸ்லிம் தலைவர்களையும் குறி வைத்து நகர்கிற அரசியல் நாகரிகம் தனிச் சீற்றமாகவே தலை தூக்கியுள்ளது!
அதன் விளைவு தான் இன்று அவர்களின் வடக்கு, கிழக்கு இணைப்பு அபிலாஷையில் தடைகளில் ஒன்றாக இருக்கும் தென்கிழக்கு முஸ்லிம்களின் கல்முனை மாநகரம்! அதை சாய்ந்தமருதுக்கு ஒரு சபையாகவும், தமிழர்களுக்கு சபையாகவும் கல்முனைக்கு சபையாகவும் என்று மேலும் நான்காகப் பிரித்து மாநகர எல்லைகளை அபகரித்து கல்முனை மாநகரில் முஸ்ஸிம் தனித்துவத்தை இல்லாதொழித்து வடக்கு, கிழக்கு இணைப்பை சாதகமாக்க கங்கணம் கட்டி அலைகின்றனர்.
இது பற்றி தென்கிழக்கு அரசியலில் முஸ்லிம் சமூக ஏக மனதான அரசியல் கட்சியான முஸ்லிம் காங்கிரஸிற்கோ அதன் தலைவர் றவூஃப் ஹக்கீம் உட்பட்ட அப்பிராந்தியத்தின் விடுதலைத் தலைவர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களுக்கோ விட்டுக் கொடுப்பதில் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால், எந்த நம்பிக்கையில் விட்டுக் கொடுப்பார்கள்?
இதையும் விட்டுக் கொடுத்தால் இனி இழப்பதற்கு ஒன்றுமே இல்லை! முழு அடிமைச் சமூகமாகத் தான் முஸ்லிம்கள் இலங்கையில் வாழ வேண்டும்!
ஆனால், இன்று முஸ்லிம்களின் சில அரசியல் ஒட்டுண்ணித் தலைவர்களாக முயற்சி எடுப்பவர்களும் அதற்குப் பின்னால் சோரம் போய்க் கொண்டிருக்கும் அற்ப ஆசை உள்ளவர்களும் எப்போது பாடம் கற்பார்கள் என்பதையும் திருந்துவார்கள் என்பதையும் பிரார்த்தனைகளோடு தான் எதிர் பார்க்க வேண்டியுள்ளது தோழர்களே!
அரசியலில் விட்டு கொடுப்பு அவசியம் தான் ஆனால் அடிமையாகி தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு வழி விட முடியாது!
ஆக கல்முனை மாநகரை முஸ்லிம் மக்கள் இழந்து வட,கிழக்கு இணைப்பில் பேரம் பேசும் சக்தியை இழந்து, தென்கிழக்கை இழந்து அடி மாடுகளாக மாறாமல். அரசியலில் சுய இலாபங்களை விட்டு , முஸ்லிம் தலைவர்களும், முஸ்லிம் மக்களும் தாங்கள் சார்ந்த சமூக நலனை மையமாகக் கொண்டு மும்முர செயற்படுதலே இந்தக் கட்டுரையான மாகாண சமஷ்டி இணைப்பில் முஸ்லிம்கள் பாதுகாக்க வேண்டிய தனித்துவ மாநகரம் ஊடாக தென்கிழக்கு பாதுகாப்பிற்கு மேலும் பலமாகவும் வலுவாகவும் அமையும்!
(அடுத்த கட்டுரை கல்முனைப் பிராந்தியம் உட்பட காணிச் சுவீகரிப்பை மையமாக வரும் இன்ஷா அல்லாஹ்)
பஷீர் இர்ஹான்

No comments:
Post a Comment