பாவனைக்குதவாத கிழங்கு, வெங்காயத்துடன் இருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Sunday, June 7, 2020

பாவனைக்குதவாத கிழங்கு, வெங்காயத்துடன் இருவர் கைது

திருகோணமலை அக்போபுர பகுதியில் பாவனைக்கு உதவாத கிழங்கு மற்றும் வெங்காயம் என்பவற்றுடன் இரண்டு பேரை கைது செய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தம்புள்ள பகுதியிலிருந்து லொறி ஒன்றில் கொண்டுவரப்பட்ட வெங்காயம் 2,000 கிலோ கிராம் மற்றும் கிழங்கு போன்றவற்றை சோதனையிட்டபோது அவை பாவனைக்கு உதவாத பொருட்கள் என கண்டறியப்பட்டது.

இதனையடுத்து இவர்கள் இருவரையும் நேற்றிரவு (6.06.2020) கைது செய்துள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்துள்ளதாகவும் அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 40 மற்றும் 45 வயதுடையவர்கள் என தெரியவருகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை கந்தளாய் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment