இராணுவ ஆட்சியும், பௌத்த மயமாக்கலும் பாதுகாப்பு என்ற பெயரில் அரங்கேற்றம் - சம்பந்தன் - News View

About Us

About Us

Breaking

Friday, June 5, 2020

இராணுவ ஆட்சியும், பௌத்த மயமாக்கலும் பாதுகாப்பு என்ற பெயரில் அரங்கேற்றம் - சம்பந்தன்

பாதுகாப்பு என்ற பெயரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவ ஆட்சியையும், பௌத்த மயமாக்கலையும் பகிரங்கமாக அரங்கேற்றி வருகின்றார். இதற்கு எதிராக எமது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ராஜபக்ஷ அரசின் இந்தப்படுமோசமான செயல்களைக் கண்டித்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காட்டமான அறிக்கையை விரைவில் நாம் வெளியிடவுள்ளோம். 

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு பாதுகாப்பான நாடு, ஒழுக்கமான, நீதியான, சட்டத்தை மதிக்கும் சமூகம் என்பவற்றைக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணியை ஜனாதிபதி உருவாக்கியுள்ளார்.

அதில் முந்நாள், இந்நாள் முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகளை மாத்திரம் உள்ளடக்கிய 13 பேரை ஜனாதிபதி நியமித்துள்ளார்.

அதேவேளை, கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் இடங்களை அடையாளம் காண்பதற்கும் பாதுகாப்பதற்கும் 11 பேர்கொண்ட ஜனாதிபதி செயலணியை ஜனாதிபதி உருவாக்கியுள்ளார். அதிலும் பௌத்த மதம் சார்ந்த பிக்குகள், படை அதிகாரி மற்றும் பொலிஸ் அதிகாரி உள்ளடங்கலாக 11 சிங்களவர்களை ஜனாதிபதி நியமித்துள்ளார். ஒரு தமிழரோ, ஒரு முஸ்லிமோ இல்லாமல் இந்தச் செயலணியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உருவாக்கியுள்ளார்.

இதற்கு எதிராக எதிர்க்கட்சிகளும், சிவில் அமைப்புகளும் கடும் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், ஜனாதிபதி கோட்டாபயவின் இந்தச் சர்வாதிகார ஆட்சி முறைக்கு எதிராக சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் காட்டமான அறிக்கையை வெளியிடவுள்ளது என்று சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment