பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் மீது நம்பிக்கை உள்ளது, அவரைப்பற்றி நம்பிக்கை வைக்க முடியும் என்கிறார் மஹிந்த தேசப்பிரிய - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 9, 2020

பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் மீது நம்பிக்கை உள்ளது, அவரைப்பற்றி நம்பிக்கை வைக்க முடியும் என்கிறார் மஹிந்த தேசப்பிரிய

(ஆர்.யசி)

பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் மீது நம்பிக்கை உள்ளது, அவருடன் இணைந்து கடமையாற்றும் எமக்கு அவரைப்பற்றி நம்பிக்கை வைக்க முடியும் என்கிறார் தேர்தல்களை ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய. ஆணைக்குழுவில் பேராரிசியர் ஹூல் தனது தரப்பு நியாயங்களை கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தேர்தல்கள் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இது குறித்து கூறுகையில், பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் கூறிய கருத்துக்கள் தொடர்பான விவகாரங்கள் ஆணைக்குழுவில் பேசப்பட்டது.

அதில் அவர் கூறியதானது" தான் எந்தக் கட்சியையும் நெருக்கடிக்குள் தள்ளும் கருத்துக்களை கூறவில்லை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் என்ற விதத்தில் எந்தவொரு கட்சியையோ அல்லது அரசியல்வாதியையோ அவமதிக்கும் அல்லது போற்றும் விதத்தில் எந்த கருத்துக்களையும் கூறவில்லை. அவ்வாறு நடந்துகொள்ளவும் மாட்டேன் "என கூறினார்.

எனினும் அவர் கூறிய காரணிகள் குறித்து மொழி பெயர்ப்பு பதிவுகள் எதுவும் இருப்பின் அவற்றை நாம் பார்த்து உறுதிப்படுத்துவோம் என ஆணைக்குழுவில் தீர்மானித்தோம். எவ்வாறு இருப்பினும் பேராசிரியர் ரதன்ஜீவன் ஹூல் கூறிய காரணிகளை இப்போது நாம் நம்புகின்றோம். ஏனெனில் நாம் அவருடன் இணைந்து கடமையாற்றி வருகின்றோம். அவர் மீது நம்பிக்கை வைத்து நாம் கடமையாற்றுகின்றோம்.

ஆகவே அவர் எம்மிடம் கூறியதை நாம் நம்புகின்றோம். அதேபோல் மார்ச் 12 அமைப்பு நிகழ்வுகளுக்கு சென்றுள்ளோம், அவர்களின் அமைப்பை நாம் ஆதரித்துள்ளோம், வாழ்த்து தெரிவித்துள்ளோம். இப்போது பேராசிரியர் ஹூல் இது குறித்து கூறியுள்ள காரணிகளை என்னால் உறுதிப்பட தெரிவிக்க முடியாது. எனக்கு அது குறித்த நினைவுகள் இல்லை. அறிக்கைகளை பார்த்து அதற்கு நான் பதில் கூற முடியும் என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

நேற்றைய கூட்டத்தில் தமது நியாயப்பாடுகளை முன்வைத்தமை குறித்து பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் கூறுகையில், எனது தரப்பு காரணிகளை நாம் ஆணைக்குழுவில் கூறினேன். நான் எந்த அரசியல் கட்சியையும் விமரிசிக்கவில்லை. சிங்கள மொழியை குப்பை என கூறவும் இல்லை, எனக்கு சிங்கள மொழி தெரியாது.

சிங்களத்தில் குப்பை என எழுதினாலும் எனக்கு தெரியாது என்றே கூறினேன். ஆகவே இது குறித்து அவர்களிடம் எனது காரணிகளை முன்வைத்துவிட்டேன். அடுத்ததாக ஆணைக்குழு தீர்மானம் எடுக்கும்.

என்மீது குற்றம் இல்லாத நிலையில் நான் அச்சம் கொள்ளத் தேவையில்லை. நான் சகல சவால்களையும் எதிர்கொள்வேன் என கூறியுள்ளேன்.

எனக்கு ஆணைக்குழு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கும் என நம்புகிறேன். அடுத்த இரு தினங்களில் மீண்டும் ஆணைக்குழு கூடும் அப்போது எனது விடயங்களை ஆணைக்குழு ஆராயும் என்றார்.

No comments:

Post a Comment