நாம் உலகளாவிய சமூகமாக குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் - பிரதமர் மஹிந்த - News View

About Us

About Us

Breaking

Saturday, June 27, 2020

நாம் உலகளாவிய சமூகமாக குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் - பிரதமர் மஹிந்த

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வரைஸ் தொற்று நோயை எதிர்கொண்டுள்ள நாம் உலகளாவிய சமூகமாக குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்த செயல்பட வேண்டும். அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் தமக்கிடையில் நிதி பெற்றுக் கொள்வதில் அனுசரணை வழங்கிக் கொள்ள வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கை நிபுணத்துவ வல்லுநர்கள் சங்கத்தின் 33 ஆவது வருட நிறைவு அமர்வில் உரையாற்றிய பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கை நிபுணத்துவ வல்லுநர்கள் சங்கத்தின் வருடாந்திர மன்றத்தில் வருட விழா இணையத்தள காணொளி ஊடாக இன்று இடம்பெற்றது.

நெருக்கடியான நிலையில் நாடு மீண்டும் முன்னேற்றமடைய பல வாய்ப்புகள் உள்ளன. ஆனால் புதிய மற்றும் தனித்துவமான திட்டங்கள் மற்றும் இந்த மறுகட்டமைப்பு உத்திகளை விரைவாக செயல்படுத்துவது நேர்மறையான வாய்ப்புகளாக மாற்றப்படலாம் .

கொரோனா வைரஸ் வைரஸின் தாக்கத்தை இலங்கை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுள்ளது. அத்துடன் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான பணியை தொழில் வல்லுநர்கள் முன்னெடுத்து வருகிறார்கள். 

குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அவர்களுக்கு பயனளிப்பதற்கும் உலகளாவிய சமூகம் நிதி பெறுகிறது. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிடமிருந்து கடன்களை மீளப் பெறுவதை உலக வங்கி தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளது.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் தற்போதைய நிலையில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புடன் செயற்பட்டால். பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகள் மற்றும் சாதாரண மக்கள் பயனடைவார்கள் என்றார்.

No comments:

Post a Comment