வடிவேல் சுரேஷ், ஹரின் பெனாண்டோக்கு எதிராக வழங்கப்பட்டிருந்த மூன்று இடைக்கால தடைகளில் ஒன்றை நீக்கியது நீதிமன்றம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 24, 2020

வடிவேல் சுரேஷ், ஹரின் பெனாண்டோக்கு எதிராக வழங்கப்பட்டிருந்த மூன்று இடைக்கால தடைகளில் ஒன்றை நீக்கியது நீதிமன்றம்

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஹரீன் பெர்னாண்டோ, செயலாளர் வடிவேல் சுரேஷுக்கு எதிராக வழங்கப்பட்டிருந்த மூன்று இடைக்கால தடை உத்தரவுகளில் ஒன்றை நீக்க கொழும்பு மாவட்ட நீதிபதி அமாலி ரணவீர நேற்று உத்தரவிட்டார். 

சங்கத்தினருக்கு அன்றாட நடவடிக்கைகளுக்காக சம்பளம் வழங்குவது தடை உத்தரவு காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகளின் சார்பில் தெரிவிக்கப்பட்ட விடயங்களை கருத்தில் கொண்டு தடை உத்தரவு ஒன்றை மாத்திரம் தளர்த்திய மாவட்ட நீதிபதி, சங்கத்தின் நிலையான வைப்பினை பாவிப்பது மற்றும் வாகனங்களைப் பாவிப்பது என்பவற்றைத் தடுக்கும் தடை உத்தரவுகளை நீடித்தார்.

சங்கத்தின் அன்றாட வங்கிக் கொடுப்பனவு நடவடிக்கையை தடுக்க வழங்கிய தடை உத்தரவை மாத்திரம் அவர் நீக்கியுள்ளார்.

தடை உத்தரவு காரணமாக தோட்டத் தொழிலாளர் சங்க அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்க முடியாதுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இதனையடுத்தே ஒரு தடையுத்தரவு நீக்கப்பட்டது.

No comments:

Post a Comment