மஹிந்த தேசப்பிரியவின் மேற்பார்வையில் இடம்பெற்ற தேர்தல் ஒத்திகை - News View

About Us

About Us

Breaking

Sunday, June 7, 2020

மஹிந்த தேசப்பிரியவின் மேற்பார்வையில் இடம்பெற்ற தேர்தல் ஒத்திகை

கொரோனா வைரஸ் தொற்று அபாயத்துக்கு மத்தியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பொதுத் தேர்தலை எவ்வாறு நடாத்துவது என்ற தேர்தல் ஒத்திகை இடம்பெற்றது.

அந்த வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் அம்பலாங்கொட பகுதியில் இன்று இடம்பெற்றது.

அம்பலாங்கொடை பிரதேச சபையின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் இந்த ஒத்திகை நிகழ்வு இன்று முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமாகியது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாகவும் 200 வாக்காளர்களை மையப்படுத்தியதாகவும் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பை முன்னெடுப்பது தொடர்பாக இந்த ஒத்திகை முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த ஒத்திகையின் போது, வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கும் விதம், வாக்காளர் ஒருவருக்கு வழங்கப்படும் கால எல்லை மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது குறித்த காரணிகள் ஆராயப்பட்டன.

இதன்போது கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment