சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக துசார உபுல்தெனிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் சிறைச்சாலைகள் வளங்கள் மற்றும் சேவை பிரிவுகளில் ஆணையாளராக பதவி வகித்த உபுல்தெனிய 30 ஆவது சிறைச்சாலை ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
2001 ஆம் ஆண்டு உதவி சிறைச்சாலை அதிகாரியாக சிறைச்சாலை திணைக்களத்திற்குள் பிரவேசித்த அவர், களனி பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை பட்டதாரி ஆவார்.
அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தில் மனித உரிமை தொடர்பான பட்டம் பெற்றுள்ள அவர், பத்து நாடுகளில் சிறைச்சாலைகள் முகாமைத்துவம் தொடர்பில் விசேட பயிற்சிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment