திறக்கப்படவுள்ள தொல்பொருள் தலங்கள், அருங்காட்சியகங்கள் - News View

About Us

About Us

Breaking

Friday, June 26, 2020

திறக்கப்படவுள்ள தொல்பொருள் தலங்கள், அருங்காட்சியகங்கள்

தொல்பொருள் சிறப்பு மிக்க இடங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்தின் பொதுமக்கள் பயன்பாட்டு பகுதி ஆகியவற்றை எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் பொதுமக்களின் பார்வைக்காக திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி தொல்பொருள் சிறப்பு மிக்க இடங்கள், நினைவுச்சின்னங்கள் மற்றும் அதன் சுற்றாடல் அருட்காட்சியகங்கள், தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்தின் பொதுமக்கள் பயன்பாட்டு பகுதி ஆகியன தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.

இருப்பினும், தற்போது நாட்டில் நிலவும் சாதகமான சூழ்நிலையை கருத்திற்கொண்டு மீண்டும் அந்நிலையங்களை சுற்றுலாப் பயணிகளுக்காக எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து திறக்கவுள்ளதாக புத்தசாசன, கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்தார்.

No comments:

Post a Comment