(நா.தனுஜா)
அளுத்கம பகுதியில் விசேட தேவையுடைய சிறுவன் பொலிஸாரால் தாக்கப்பட்ட சம்பவம் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் விதமாக செயற்பட்ட பொலிஸாரின் செயற்பாடுகளை மறைப்பதாக அமைந்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்திருக்கிறார்.
அளுத்கம பகுதியில் கடந்த 25 ஆம் திகதி விசேட தேவையுடைய தாரிக் அஹமட் என்ற சிறுவன் பொலிஸ் அதிகாரிகள் சிலரால் அச்சுறுத்தப்பட்டு தாக்கப்பட்ட சி.சி.டி.வி காணொளிகள் சமூகவலைத்தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து கட்சிபேதமின்றி அரசியல்வாதிகள் பலரும் தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருக்கும் சஜித் பிரேமதாஸ கூறியிருப்பதாவது.
களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த விசேட தேவையுடைய சிறுவனை அச்சுறுத்தி, உடல் ரீதியாகவும் காயமேற்படுத்திய பொலிஸாரின் செயல் எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளப்படவோ, மன்னிக்கப்படவோ முடியாததாகும் என்பதோடு இது அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டியதாகும்.
இச்சம்பவம் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் விதமாக செயற்பட்ட பொலிஸாரின் செயற்பாடுகளை மறைப்பதாக அமைந்துள்ளது. இதனுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன்நிறுத்தப்படுவதோடு, அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.
No comments:
Post a Comment