மட்டக்களப்பு மாவட்டத்தில் நஞ்சற்ற நிலக்கடலை அறுவடை - News View

About Us

About Us

Breaking

Sunday, June 7, 2020

மட்டக்களப்பு மாவட்டத்தில் நஞ்சற்ற நிலக்கடலை அறுவடை

எஸ்.எம்.எம்.முர்ஷித்

ஜனாதிபதியின் நஞ்சற்ற உணவு உற்பத்தி வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தோட்டங்களின் நிலக்கடலை அறுவடை விழா மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களம் ஏற்பாட்டில் வாழைச்சேனை கமநல சேவை பிரிவில் நிலக்கடலை அறுவடை விழா கிரான் சேம்பையடி விவசாயக் கண்டத்தில் கி.பிரபாகரன் என்பவரின் தோட்டத்தில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.

விவசாய போதனாசியர் எம்.ஜமால்டீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள பிரதி விவசாயப் பணிப்பாளர் வி.பேரின்பராஜா, விவசாய திணைக்கள உதவி விவசாயப் பணிப்பாளர் ஈ.சுகந்ததாசன், உறுகாமம் பிரிவு பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் எஸ்.நிரோஜன், வாழைச்சேனை விவசாய போதனாசிரியர்களான எஸ்.சிரிகண்ணன், எச்.எம்.றியாழ், தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஏ.எம்.றிபாய்ஸ், வாகனேரி திட்ட முகாமையாளர் எம்.தீபகாந், கிராம சேவை அதிகாரி சண்முகம் குரு, வாகனேரி திட்ட முகாமைத்துவக் குழு தலைவர் எஸ்.புஸ்பாகரன், விவசாய அமைப்பினர், கிராம மட்ட பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது நஞ்சற்ற முறையில் ஆரம்பிக்கப்பட்ட நிலக்கடலை உற்பத்தியின் மூலம் கிடைக்கப்பெற்ற நிலக்கடலை அறுவடை செய்து வைக்கப்பட்டதுடன், ஜனாதிபதியின் நஞ்சற்ற உணவு உற்பத்தி வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தினால் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட நஞ்சற்ற முறையில் செய்கை செய்யப்பட்ட நிலக்கடலை அறுவடை இடம்பெற்று வருவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள பிரதி விவசாயப் பணிப்பாளர் வி.பேரின்பராஜா தெரிவித்தார்.

பெரும்பாலான தோட்டப் பயிர்களை நஞ்சு கொண்ட கிருமி நாசினிகளை தெளித்து உற்பத்தி செய்வதால் தோட்டப் பயிர்கள் நஞ்சாக உற்பத்தி செய்யப்படுவதால் இதனை உண்ணும் போது பாரிய நோய்கள் ஏற்படுவதாகவும் பிரதி விவசாயப் பணிப்பாளர் வி.பேரின்பராஜா மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment