கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் மீண்டும் திறக்கப்படும் : அமைச்சர் பிரசன்ன ரணதுங்க - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 9, 2020

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் மீண்டும் திறக்கப்படும் : அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

(எம்.ஆர்.எம்.வஸீம்)

கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் மூடப்பட்டிருக்கும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் மீண்டும் திறக்கப்படும். அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் இடம்பெற்றுவருகின்றன என சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

மூடப்பட்டிருக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் திறப்பதற்கு மேற்கொண்டுவரும் நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் மூடப்பட்டிருக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் திறப்பதற்கான வேலைத்திட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன. 

அதன் பிரகாரம் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் மீண்டும் திறப்பதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளோம். விமான நிலையத்தின் அனைத்து செயற்பாடுகளும் புதிய செயற்திட்டத்தின் பிரகாரம் மேற்கொள்ளவே திட்டமிட்டிருக்கின்றோம்.

அத்துடன் வெளிநாடுகளில் இருந்து இலங்கைககு வரும் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பீ.சீ.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தி, அதன் அறிக்கையை அவ்விடத்திலே கையளிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். 

பரிசோதனை அறிக்கை வரும் வரை, அவர்களை விமான நிலையத்துக்கு அருகில் இருக்கும் ஹோட்டல்களில் தங்க வைப்பதற்கும் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.

அத்துடன் பீ.சீ.ஆர். பரிசோதனைகளை துரிதப்படுத்துவதற்காக கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட பரிசோதனை நிலையம் ஒன்றை அமைப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது என்றார்.

கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு சுகாதாரத்துறையின் பரிந்துரைக்கமைய நாட்டின் அனைத்து விமான நிலையங்களும் கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி முதல் மூடிவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தது. 

விமான நிலையங்கள் மூடப்பட்டிருந்தாலும் வெளிநாடுகளில் தங்கியிருந்த இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் தற்போதும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment