டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம மேற்கு 5 ஆம் பிரிவு தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய 8 தொழிலாளர்கள் டயகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தெரிய வருவதாவது, டயகம மேற்கு 5 பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் இன்று (07) காலை 9 மணியளவில் 10 இலக்க தேயிலை மலையில் வேலை செய்துகொண்டிருந்த போது மரம் ஒன்றில் இருந்த குளவிக் கூடு கலைந்து இவர்களை தாக்கியுள்ளது.
இவர்கள் உடனடியாக தோட்ட நிர்வாகத்தின் உதவியோடு டயகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் 7 பெண் தொழிலாளர்கள் ஒரு ஆண் மேற்பார்வை உத்தியோகத்தர் ஆக 8 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மலையக நிருபர் திருகேதீஸ்

No comments:
Post a Comment