கொழும்பின் சில பகுதிகளில்18 மணி நேர நீர் வெட்டு - News View

About Us

About Us

Breaking

Thursday, June 25, 2020

கொழும்பின் சில பகுதிகளில்18 மணி நேர நீர் வெட்டு

திருத்த வேலை காரணமாக, நாளை மறுதினம் சனிக்கிழமை (27) கொழும்பின் சில பகுதிகளில் 18 மணி நேர நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய சனிக்கிழமை இரவு 10.00 மணி முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணி வரை நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

கொச்சிக்கடை, கொட்டாஞ்சேனை (கொழும்பு 13), கிராண்ட்பாஸ் (கொழும்பு 14), மோதரை, மட்டக்குளி (கொழும்பு 15) ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கோட்டை (கொழும்பு 01), புறக்கோட்டை (கொழும்பு 11), புதுக்கடை (கொழும்பு 12) ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் எனவும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment