13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : சிறுமியின் தந்தை, தாயார் உட்பட மூவருக்கு விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Friday, June 5, 2020

13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : சிறுமியின் தந்தை, தாயார் உட்பட மூவருக்கு விளக்கமறியல்

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு கண்ணகிபுரம் பிரதேசத்தில் 13 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 19 வயதுடைய இளைஞர், சிறுமியின் தந்தையார் மற்றும் தாயார் உட்பட மூவரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்ஸா கடந்த புதன்கிழமை (03) உத்தரவிட்டார்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிறுமியின் பெற்றோர் 19 வயதுடைய இளைஞர் ஒருவருக்கு சட்டத்திற்கு முரணான முறையில் திருமணம் முடித்து வைத்துள்ளர்.

இதன் பின்னர் சில மாதங்களில் இருவரையும் பிரித்து வைத்துள்ளனர். இந் நிலையில் சிறுமியின் மாமியாருக்கு இது தெரிய வந்ததையடுத்து அவர் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து திருமணம் முடித்த 19 வயது இளைஞரையும் சிறுமியின் தந்தை, தாயார் உட்பட 3 பேரை பொலிஸார் கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதேவேளை தலைமறைவாகியுள்ள சிறுமியின் மாமியாரின் கணவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் கைது செய்யப்பட்ட 19 வயதுடைய இளைஞன், சிறுமியின் தந்தை, தாயார் உட்பட 3 பேரையும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் கடந்த புதன்கிழமை (03) ஆஜர்படுத்தப்பட்டபோது மூவரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அம்பாறை நிருபர்

No comments:

Post a Comment