மஸ்கெலியா, ஹொரண பிளான்டேசனுக்கு உரித்தான ஓல்டன் தோட்ட கிங்கோரா பிரிவில் இன்று (05) மதியம் குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 தோட்டத் தொழிலாளர்களும், லக்கம் சீர்பாத பிரிவில் குளவிக் கொட்டுக்கு இலக்கான ஒருவரும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கிங்கோரா பிரிவில் குளவிக் கொட்டுக்கு இலக்கானவர்களில் 08 பெண் தொழிலாளர்களும், 03 ஆண் தொழிலாளர்களும் அடங்குகின்றனர்.
இவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதோடு, அவ்வாறு கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவர்களில் கர்ப்பிணித் தாய் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார்.
லக்கம் சீர்பாத பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகியவர் 29 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையாவார். இவர் விறகுக்கு சென்ற வேளையில், குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளதோடு, சிகிச்சைக்காக மஸ்கெலியா மாவட்ட வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருதாகவும், மாவட்ட வைத்திய அதிகாரி லியத்த பிட்டிய தெரிவித்தார்.
(மஸ்கெலியா விஷேட நிருபர் செ.தி.பெருமாள்)
No comments:
Post a Comment