மறு அறிவிப்பு வரை ஊரடங்கு இரவு 11.00 முதல் அதிகாலை 4.00 வரை - கொழும்பு, கம்பஹா இடையே போக்குவரத்து தடை - News View

About Us

About Us

Breaking

Friday, June 5, 2020

மறு அறிவிப்பு வரை ஊரடங்கு இரவு 11.00 முதல் அதிகாலை 4.00 வரை - கொழும்பு, கம்பஹா இடையே போக்குவரத்து தடை

நாளை, ஜுன் மாதம் 06 ஆம் திகதி சனிக்கிழமை முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இரவு 11.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.

மறு அறிவித்தல் வரை இது அமுலில் இருக்கும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கான அனுமதியில் மாற்றங்கள் இல்லை.

அரச, தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களை நடத்திச் செல்லும் போதும், அன்றாட இயல்பு வாழ்க்கையின் போதும் கொரோனா ஒழிப்பு சுகாதார பரிந்துரைகளை முழுமையாக பின்பற்றுமாறு அரசாங்கம் அனைத்து தரப்பினரிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment