மன்னார் நகரில் சுமார் 109 கிராம் நிறையுடைய தங்கத்துடன் நேற்று (07) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் கடற்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, வடமத்திய கட்டளை பிரிவு கடற்படையினர், மன்னார் பொலிஸ் குற்றப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் மன்னார் நகரில் நேற்று (07) விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், மன்னார் பிரதான பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான ஒருவரை சோதனைக்கு உட்படுத்தியபோது, சுமார் 109 கிராம் தங்கம் அவரிடம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
அனுமதிப்பத்திரமின்றி குறித்த தங்கத்தை கொண்டு சென்ற குற்றச்சாட்டில், தங்கத்துடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சுமார் 11 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கம் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மன்னார், தாராபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்டுள்ள தங்கத்துடன் சந்தேகநபர், மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


No comments:
Post a Comment