கிளிநொச்சியில் பலத்த காற்று - மின்கம்பங்கள் முறிவு - பல பகுதிகளில் மின்சாரத் தடை - News View

Breaking

Post Top Ad

Thursday, May 21, 2020

கிளிநொச்சியில் பலத்த காற்று - மின்கம்பங்கள் முறிவு - பல பகுதிகளில் மின்சாரத் தடை

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று (21) காலை முதல் வீசி வந்த பலத்த காற்றினால் பூநகரி, குடமுருட்டி பகுதியிலுள்ள மின் கம்பங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக பூநகரிப் பிரதேசத்திற்குட்பட்ட பல கிராமங்களுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதில் 06 மின்கம்பங்கள் முற்றாக சேதமடைந்துள்ளன.

அத்தோடு, கிளிநொச்சி இரத்தினபுரம் சித்தி விநாயகர் ஆலயத்திற்கு முன்பாக காணப்பட்ட பாரிய பாலை மரமொன்று முறிந்து வீழ்ந்ததை தொடர்ந்து, இரண்டு மின் கம்பங்கள் சேதமடைந்தமையால் வட்டக்கச்சி, இராமநாதபுரம் பகுதிகளுக்கான மின்சாரம் முற்றாக தடைப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பகுதியில் போக்குவரத்தும் தடைப்பட்டமையால், பிரதேச மக்கள் ஒன்றிணைந்து வீழ்ந்த மரத்தை அகற்றியுள்ளனர்.

(கிளிநொச்சி முருகையா தமிழ்செல்வன், எஸ்.என்.நிபோஜன், யது பாஸ்கரன்)

No comments:

Post a Comment

Post Bottom Ad