மேலும் 49 கடற்படையினரின் உறவினர்கள் வீடு திரும்பினர் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 16, 2020

மேலும் 49 கடற்படையினரின் உறவினர்கள் வீடு திரும்பினர்

தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடற்படையினரின் 11 குடும்பங்களைச் சேர்ந்த 49 பேர், தங்களது தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை பூர்த்தி செய்து கொண்டு நேற்று (15) வெளியேறியுள்ளனர்.

ஹபராதுவ பொலிஸ் கட்டடத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 04 குடும்பங்களைச் சேர்ந்த 18 பேரும், அநுராதபுரம் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த 07 குடும்பங்களைச் சேர்ந்த 31 பேரும் தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்துகொண்டு சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இவ்வாறு தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்தமைக்காக அவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

கடற்படையினரின் குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலர், தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்து, கடற்படையினரின் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ள போதிலும், அவர்கள் அனைவரும் மேலும் 14 நாட்களுக்கு அவர்களின் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment