கடைக்குச் சென்று திரும்பியவர் துப்பாக்கிச் சூட்டில் பலி - News View

About Us

About Us

Breaking

Saturday, May 16, 2020

கடைக்குச் சென்று திரும்பியவர் துப்பாக்கிச் சூட்டில் பலி

கட்டுநாயக்க பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹீனட்டியன, மினுவாங்கொடை பிரதேசத்தில் நேற்றிரவு (15) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் படுகாயமடைந்த நிலையில், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மினுவாங்கொடையைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

கடையொன்றுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர்களது வீட்டுக்கு அருகில் வசிக்கும் இருவர், வீதியில் காத்திருந்து மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த இவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இருவருக்கும் இடையில் ஏற்கனவே காணப்பட்ட பிரச்சினை காரணமாக இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதோடு, சந்தேகநபர்களை கைது செய்வது தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment