கங்கைகளின் நீர்மட்டம் உயர்வு - பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 16, 2020

கங்கைகளின் நீர்மட்டம் உயர்வு - பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

மழையுடனான காலநிலையைத் தொடர்ந்து களனி கங்கை, கிங் கங்கை, களு கங்கை, அத்தனகலு ஓயா, மாஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், பொதுமக்களை அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்களிடம், நீர்ப்பாசனத்துறை திணைக்களம் இவ்வேண்டுகோளை முன்வைத்துள்ளது.

களனி கங்கையானது ஹோலோம்புவ, கித்துலகல, நோர்வூட் பிரதேசங்களில் எச்சரிக்கை மட்டத்தில் காணப்படுவதாக, நீர்பாசனத்துறை திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்தது.

களு கங்கையானது, எச்சரிக்கை மட்டத்தில் காணப்படுகிறது. கிங் கங்கையானது, தவலம பிரதேசத்தில் எச்சரிக்கை மட்டத்தை அடைந்துள்ளதோடு, அத்தனகலு ஓயாவானது, துனமலே பிரதேசத்தில் எச்சரிக்கை மட்டத்தில் உள்ளது.

மாஓயாவானது, கிரிஉல்ல பிரதேசத்தில் எச்சரிக்கை மட்டத்தில் உள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment