கொரோனா தனிமைப்படுத்தும் இடைக்கால முகாம்கள் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ஏற்படுத்தபடமாட்டாது என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் இராணுவம், பொலிஸ் மற்றும் கடற்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் வெளி மாவட்டத்திலிருந்து வருகை தருவோருக்கான பாஸ் தொடர்பாக பேசப்பட்டது. இதன்போது வெளி மாவட்டத்தவர்களுக்கு மன்னாரில் பாஸ் வழங்கும் நடைமுறை இருக்காது என வைத்திய அதிகாரிகள் தெரிவித்தபோது அதற்கு பாதுகாப்பு படையினர் சம்மதம் தெரிவித்தனர்.
மேலும் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தனிமைப்படுத்தும் நிலையங்களை உருவாக்காது மக்கள் செறிவற்ற பகுதியில் இதை மேற்கொள்ளும்படி வேண்டப்பட்டது.
அத்துடன் மாகாண கல்வி செயலாளரிடமும், எதிர்காலத்தில் பாடசாலைகளை இதற்காக வழங்கும்போது அரசாங்க அதிபரிடமும் கலந்தாலோசித்த பின்பே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
தலைமன்னார் நிருபர்
No comments:
Post a Comment