கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கியமான நாடுகளில் ஒன்று வட கொரியா. சர்வாதிகார ஆட்சி நடைபெறும் அந்நாட்டின் ஜனாதிபதியாக கிம் ஜொங் உன் (36) செயல்பட்டு வருகிறார்.
உலக நாடுகளுடன் பெரும்பாலும் வர்த்தகம் உள்ளிட்ட எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளாத வட கொரியாவில் ஊடகங்கள் உட்பட அனைத்து துறைகளும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
வெளிநாட்டு ஊடகங்கள் அந்நாட்டில் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு நடக்கும் எந்த ஒரு நிகழ்வும் வெளி உலகிற்கு தெரியாமலேயே உள்ளது.
இந்நிலையில் வட கொரியாவின் ஜனாதிபதி கிம் ஜொங் உன், இதய பாதிப்பால் மரணத்திற்காக போராடுகின்றார் அவர் இறந்து விட்டதாவும் அவர் எழுந்து நடக்க முடியாது இருப்பதாகவும் பல்வேறு யூகங்களில் செய்திகள் வெளியான நிலையில் நேற்று திடீரென பொது நிகழ்ச்சியொன்றில் தனது சகோதரியுடன் கலந்து கொண்டதாக புகைப்படங்களுடன் செய்திகள் வெளியாகியுள்ளன.
வட கொரியாவின் சன்ச்சூனில் ஒரு தொழிற்சாலையை கிம் நாடாவை வெட்டி திறக்கும் நிகழ்வை வட கொரியாவின் அரச ஊடகம் புகைப்படத்துடன் கூடிய செய்தியாக வெயிட்டுள்ளதாக சவர்வதேச ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்குப் பின்னர் கிம் பொது நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று கிம் ஜொங் உன் திடீரென பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
வட கொரிய தலைநகர் பியோங்யாங் நகரில் உள்ள சன்ச்சூன் என்ற இடத்தில் பிரம்மாண்டமான உரத் தொழிற்சாலை திறப்பு விழாவில் கிம் ஜொங் உன், தனது சகோதரியுடன் கலந்து கொண்டு நாடாவை வெட்டியதாக மத்திய கொரியன் செய்தி ஏஜென்சி புகைப்படங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் கடந்த மூன்று வாரங்களாக கிம் பற்றிய பல்வேறு செய்திகள் வெளியான நிலையில் நேற்று திடீரென பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வட கொரியாவை ஸ்தாபித்த கிம் இல் சுங்கின் பிறந்தநாள் விழா கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி சூரியனின் நாள் என்ற பெயரில் ஆண்டு தோறும் அந்நாட்டில் விழாவாக கொண்டாடப்படும். இந்த விழாவில் வட கொரிய ஜனாதிபதி உட்பட உயர் அதிகாரிகள் பங்கேற்பது வழக்கம். கடந்த 2011 ஆம் ஆண்டில் பதவியேற்றதில் இருந்து முதன்முறையாக இவ்வாண்டு கிம் ஜொங் உன் பங்கேற்காமல் இருந்துள்ளார்.
முக்கியமான நிகழ்வில் கிம் பங்கேற்காதது அவரது உடல்நலம் குறித்து சந்தேகத்தை கிளப்பியது. எனினும் அண்டை நாடான தென் கொரியாவின் இணைய பத்திரிகையான டெய்லி என்.கே., ஏப்ரல் 12 ஆம் திகதி கிம் ஜொங் உன்னிற்கு இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளதாக தெரிவித்திருந்தது.
அதிகளவு புகைப்பிடித்தல், உடல்பருமன் மற்றும் அதிக வேலை காரணமாக கிம்மிற்கு இதய பாதிப்பு ஏற்பட்டது. தற்போது ஹியாங்சன் கவுண்டியில் உள்ள ஒரு வில்லாவில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், கிம்மின் உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
இதேவேளை, வட கொரியாவின் முன்னாள் தூதுவர் தே யாங் ஹோ சி.என்.என். செய்தி நிறுவனத்திற்கு முன்னதாக அளித்த பேட்டியில், கிம் ஜொங் உன் வட கொரியாவின் தலைவர் மட்டுமல்ல. கிம் சங்கின் பேரனும் ஆவார். அவருக்கு உண்மையிலேயே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதா என எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாக எனக்கு தெரியும். அவர் உயிருடன்தான் இருக்கிறார். ஆனால் அவரால் எழுந்து கூட நிற்க முடியாத நிலை உள்ளது என வடகொரியாவின் முன்னாள் தூதுவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment