மேல் மாகாணத்தில் ஊரடங்கால் சிக்கியுள்ளவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கை ஆரம்பம்..! - News View

About Us

About Us

Breaking

Friday, May 1, 2020

மேல் மாகாணத்தில் ஊரடங்கால் சிக்கியுள்ளவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கை ஆரம்பம்..!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், தமது இருப்பிடங்கலுக்கு செல்ல முடியாமல் மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் இன்று (சனிக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வழிநடாத்தலில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி முதல்கட்டமாக 320 பேர் வரை இன்று அவர்களது இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

களனி பொலிஸ் வலயத்தில் இருந்தே அவர்கள் இவ்வாறு இருப்பிடங்களுக்கு அனுப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், கர்ப்பிணிகள், சிறுவர்கள் உள்ளிட்டோர் இதில் உள்ளடங்குவதாகவும் அவர்களுக்கு வைத்திய பரிசோதனைகளை முன்னெடுத்த பின்னர் இவ்வாறு வீடுகளுக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

முதற்கட்டமாக வீடுகளுக்கு அனுப்பப்படும் குறித்த 300 இற்கும் அதிகமானோர், பொலிஸ் பாதுகாப்புடன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில், 23 மாவட்டங்களுக்கு அனுப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.

இருப்பினும் இந்த தகவலை பொலிஸ் தலைமையகம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை எனினும் ஏற்கனவே இதற்கான வேலைத் திட்டம் வகுக்கப்பட்டாலும், இன்று முதல் அவ்வாறு அவர்கள் வீடுகளுக்கு அனுப்படுகின்றார்களா என்பது குறித்த உத்தியோகபூர்வமான தகவல்கள் தங்களிடம் இல்லை என பொலிஸ் பேச்சாளரின் அலுவலக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment