திருகோணமலை திருக்கோணேஸ்வரம் கோயில் மான்கள் உணவுக்காக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் கூட மரக்கறி வகைகளை மான்கள் உண்பதற்கு வழங்கும் நபர்களையும் திருகோணமலையில் காணக்கூடியதாக இருக்கின்றது.
இந்த நிலையில் திருகோணமலை நகரை அழகுபடுத்தும் மான்களை பாதுகாப்பது அனைவருடைய கடமையாகும். எனவே மான்களுக்கு உண்பதற்கு உணவுகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை அரச அதிகாரிகள் எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
No comments:
Post a Comment