வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வோர் பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Monday, May 18, 2020

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வோர் பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பம்

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வோரை பதிவு செய்யும் நடவடிக்கைகளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நாளை முதல் ஆரம்பிக்க உள்ளது.

அதற்கிணங்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைமையகம் மற்றும் அனைத்து மாகாண மற்றும் மாவட்ட காரியாலயங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வோர் தம்மைப் பதிவு செய்ய முடியுமென மேற்படி பணியகம் தெரிவித்துள்ளது.

மேற்படி நடவடிக்கையின் முதற்கட்டமாக தென்கொரியா, ஜப்பான், கனடா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்ல எதிர்பார்த்துள்ளவர்கள் தம்மை பதிவு செய்து கொள்ள முடியும் என்றும் மேற்படி பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்புக்காக செல்வோரை பதிவு செய்யும் நடவடிக்கைகளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி தற்காலிகமாக நிறுத்தி இருந்தது. 

அதேவேளை மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கான பதிவு செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் வாரங்களில் ஆரம்பமாகும் என்றும் பணியகம் தெரிவித்துள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment