அரசாங்கம் தொழிலாளர்களை பாதுகாக்கும் காத்திரமான செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Friday, May 1, 2020

அரசாங்கம் தொழிலாளர்களை பாதுகாக்கும் காத்திரமான செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்



(றிஸ்கான் முகம்மட்)

“பல தொழிலாளர்கள் வேலை இழப்பு, வருமான இழப்பு எனப் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கும் வேளையில், இந்த தொழிலாளர் தினத்தைக் கடக்கிறார்கள். இவர்களுடைய உரிமைகளை அனைவரும் ஒற்றுமையாகப் பாதுகாக்கும் வகையில் இந்தத் தொழிலாளர் தினம் அமைய வேண்டும்” என ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான கலாநிதி ஜனகன் வலியுறுத்தியுள்ளார்.

மே தினம் தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவையாவன “அனைவருக்கும் உலக தொழிலாளர் தின நல் வாழ்த்துகள். இன்று உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் இந்த கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பல தொழிலாளர்கள் வேலை இழப்பு, வருமான இழப்பு எனப் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கும் வேளையில், இந்த தொழிலாளர் தினத்தைக் கடக்கிறார்கள். இவர்களுடைய உரிமைகளை அனைவரும் ஒற்றுமையாகப் பாதுகாக்கும் வகையில் இந்தத் தொழிலாளர் தினம் அமைய வேண்டும். 

“இன்று நிர்க்கதியாகியுள்ள தொழிலாளர்களின் உரிமை அவர்களுடைய வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக அனைவரும் சிந்திக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். முக்கியமாக அரசாங்கம் இத்தொழிலாளர்களைப் பாதுகாக்கும் காத்திரமான செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். அந்த செயற்பாடுகளுக்கு அனைவரும் ஒற்றுமையாக அரசியல், இன, மத பேதம் இன்றி ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். 

“இத்தொழிலாளர்களை பாதுகாப்புதனூடாக மட்டுமே நாட்டின் பொருளாதாரத்தின் காத்திரமான நிலையை அடைய முடியும் என்பதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் நாட்டில் கடந்த மே தினமும் இன்றைய மேதினமும் அரசியல் கலாசாரம் அற்று அமைதியாக கடந்து செல்கிறது. இவ்வாறு இனிவரும் மே தினங்களும் அரசியலற்று முழுமையாக தொழிலாளர்களை மையப்படுத்தி அமைய வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு” என, அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment