கேப்பாபுலவு தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்தவர் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, May 1, 2020

கேப்பாபுலவு தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்தவர் உயிரிழப்பு

முல்லைத்தீவு, கேப்பாபுலவு விமானப்படை தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த முதியவர் ஒருவர் இன்று (01) காலை உயிரிழந்துள்ளார்.

சுகவீனம் காரணமாக அவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.

குறித்த முதியவர் உயிரிழந்தமைக்காண காரணங்கள் இதுவரை வெளியிடப்படாத நிலையில் சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது 

குறித்த நபருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது

(சண்முகம் தவசீலன்)

No comments:

Post a Comment