ஆறு வீரர்களை அதிரடியாக நீக்கியது அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை - News View

About Us

About Us

Breaking

Saturday, May 2, 2020

ஆறு வீரர்களை அதிரடியாக நீக்கியது அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்திலிருந்து ஆறு வீரர்களை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அதிரடியாக நீக்கியுள்ளது. 

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர்களை மத்திய ஒப்பந்தத்தில் இணைத்துக் கொள்ளும். சோபிக்கத் தவறும் வீரர்களை மத்திய ஒப்பந்தத்திலிருந்து நீக்கி விடும். 

இதன்படி, இவ்வாண்டுக்கான மத்திய ஒப்பந்தத்திலிருந்து துடுப்பாட்ட வீரர்களான ஷோன் மார்ஷ், உஸ்மான் கவாஜா, பீற்றர் ஹேண்ட்ஸ்கொம்ப், மார்கஸ் ஹெரிஸ், சகலதுறை வீரரான மார்கஸ் ஸ்டோய்னிஸ், பந்துவீச்சாளரான நெதன் கூல்ட்டர்-நைல் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்ட வீரர்களாவர். 

இதேவேளை, அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மார்னுஸ் லபுசாஞ்னே மற்றும் காயத்திலிருந்து மீண்டுள்ள சகலதுறை வீரரான மிட்ச்செல் மார்ஷை ஆகிய இருவரையும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை மத்திய ஒப்பந்தத்தில் இணைத்துள்ளது. 

அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபையின் ஒப்பந்தத்தில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்.

அஷ்டன் அகர், ஜோ பேர்ன்ஸ், அலெக்ஸ் கெரி, பெட் கம்மின்ஸ், ஆரோன் பிஞ்ச் , ஜோஷ் ஹேசில்வூட், டிரெவிஸ் ஹெட், மார்னுஸ் லபுசாஞ்னே, நெதன் லயன், மிட்ச்செல் மார்ஷ், கிளென் மெக்ஸ்வெல், டிம் பெய்ன், ஜேம்ஸ் பெட்டின்சன், ஜை ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவன் ஸ்மித், மிட்ச்செல் ஸ்டார்க், மெத்யூ வேட், டேவிட் வோர்னர், அடம் ஸம்பா.

No comments:

Post a Comment