கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு எதிராக உதவும் வயைில் சம்பியன்ஷிப் தொடரின்போது பயன்படுத்திய ஜேர்ஸி, டெஸ்ட் அரங்கில் முச்சதம் குவித்த துடுப்பாட்ட மட்டை ஆகியவற்றை ஏலம் விடுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான அஸார் அலி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் டெஸ்ட் அணித் தலைவர் அஸார் அலி பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலாவது முச்சதத்தை அடித்தவாராக விளங்குகிறார். இவர் இதை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அடித்திருந்தார்.
அத்துடன் 2017 இல் பாகிஸ்தான் அணி சம்பியன்ஸ் கிண்ணம் வென்றிருந்த அணியில் அங்கம் வகித்த அஸார் அலி, பாகிஸ்தான் குழாத்தில் இடம்பெற்றிருந்த அனைவரும் கையொப்பமிட்டிருந்த தனது ஜேர்ஸியை ஏலத்தில் விட்டுள்ளார்.
இந்நிலையில், தற்போது உலகளாவிய ரீதியில் கொவிட்-19 காரணமாக இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தனது தாய்நாட்டு மக்களுக்கு உதவுவதற்காக குறித்த துடுப்பாட்ட மட்டை மற்றும் ஜேர்ஸியை ஏலத்தில் விட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
'நான் எனது மிகவும் நெருங்கிய தொடர்புடைய இரண்டு உடமைகளை கொரோனா பாதிப்புக்கு எதிராக உதவுவதற்காக ஏலத்தில் விட இருக்கிறேன். இவற்றுக்கு ஒரு மில்லியன் பாகிஸ்தான் ரூபாவை ஆரம்ப தொகையாக அறிவித்துள்ளேன்' என்றார்.
இவர் மேலும் குறிப்பிடுகையில், “'இந்த பொருட்கள் இரண்டும் எனது மனதுக்கு மிகவும் நெருக்கமான பொருட்கள். ஆனால், இவ்வாறான இக்கட்டான காலப்பகுதியில் இவை பயன்படுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.
No comments:
Post a Comment