பிரதமர் கூட்டவுள்ள கூட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றும் எனத் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், கொரேனா ஒழிப்பு தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை பாராட்டத்தக்கது. எனினும் மக்களுக்கான உதவிகள் கிடைப்பதில் தாமதம் காணப்படுகிறது. மக்களுக்கான உதவி திட்டங்கள் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் குறித்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளும் என, யாழ்ப்பாணம் கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று அவர் நடத்திய ஊடக சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். இதில் கலந்துகொள்வது தொடர்பாக கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் கூட்டமைப்பு தலைவர்களுடன் கலந்துரையாடியுள்ளார். கூட்டமைப்பின் மூன்று கட்சிகளின் தலைவர்களும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் கலந்துரையாடி இந்த முடிவுக்கு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் இரா.சம்பந்தனுடன் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் எனவும் அவர் கூறினார். இதன்போது கலந்துகொள்வதற்கான காரணம் தொடர்பாக அறிக்கையென்றையும் வெளியிடுவார். கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கலந்து கொள்வார்கள்.
இதேவேளை கொரோ தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது. எனினும் கொரோனா முற்றாக தடுக்கப்பட்டுவிட்டது என காண்பிக்க எண்ணுவது தவறான விடயம். பொதுமக்களும் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு புலம்பெயர்ந்து வாழும் மக்கள் உதவிகளை செய்துவருகிறார்கள். அவர்களும் பாதிப்புக்குள் இருந்து உதவி செய்கிறார்கள் என்பதை எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இதேவேளை சஜித் பிரேமதாஸ ஐக்கிய மக்கள் சக்தி கூட்டனி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ள போதும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அணியினர் கூட்டத்தில் கலந்துகொள்ளாவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜே.வி.பி. குறித்த கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment