நிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் - அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை - News View

Breaking

Post Top Ad

Friday, May 29, 2020

நிந்தவூர் கடற்கரையோரத்தில் பெண்ணிண் சடலம் - அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை

நிந்தவூர் பிரதேசத்தின் கடற்கரையோரத்தில் பெண்ணொருவரின் சடலமொன்று கரையொதிங்கியுள்ளது.

இன்று (29) மாலை கரையொதுங்கிய இச்சடலமானது சுமார் 53 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரினது என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இந்த சடலம் தற்போதைக்கு யாருடையது என்பதனை அடையாளம் காண முடியாதுள்ளதுடன், சடலமானது கரையொதிங்கிய இடத்திலேயே காணப்பட்டது.

இதேவேளை குறித்த பெண்ணை அடையாளம் காண இவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக சம்மாந்துறைப் பொலிஸாரிற்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதுடன், இது பற்றிய மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(நிந்தவூர் நிருபர் - சுலைமான் ராபி)

No comments:

Post a Comment

Post Bottom Ad