எஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவின் பேத்தாழையில் மயானத்தில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
பேத்தாழையயைச் சேர்ந்த ச.புஸ்பகுமார் வயது (22) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த திங்கள் கிழமையன்று சமூர்த்தி பணத்தினை பெற்று மனைவியிடம் வழங்கிவிட்டு தானும் அதில் ஒரு தொகையினை எடுத்துக்கொண்டு வேலைக்கு சென்றுவருவதாக கூறி வீட்டை விட்டு வெளியேறி சென்றதாக இறந்தவரின் மனைவி தெரிவித்தார்.
குறித்த நபர் குடும்பத்தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறுவதாகவும் பின்னர் மனைவியின் பொலிஸ் முறைப்பாட்டின்படி சமதானப்படுத்தும் செயற்பாடு இடம்பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
குறித்த நபர் தீ மூட்டி எரிந்து கொண்டிருப்பதனை அவதானித்த பொதுமக்கள் கல்குடா பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தினை மீட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment